''தல'' பத்தி யாராவது பேசினா அவ்வளவு தான்...அவர் தான் நாட்டுக்கே ஹீரோ...புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 11, 2018 07:49 PM
என்ன தான்,நான் உலக சாதனை படைத்தாலும்,தோனி தான் நாட்டுக்கே ஹீரோ என இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின் அரிய வெற்றியை பதிவு செய்ததோடு, சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது
இந்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸின் உலக சாதனையை சமன் செய்து அசத்தினார்.மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 கேட்ச் பிடித்து சாதனை படைத்தார்.இதன் மூலம் இவர், ஒரே டெஸ்டில் அதிககேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் (11 கேட்ச், எதிர்- பாகிஸ்தான், 2013), முன்னாள் இங்கிலாந்து வீரர் ரசல் (11 கேட்ச், எதிர்- தென் ஆப்ரிக்கா, 1995) ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில், நான் என்ன தான் உலக சாதனை படைத்தாலும்,நாட்டுக்கே ஹீரோ தோனி தான் என, ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் ".கிரிக்கெட் வீரராக அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நிச்சயமாக தோனி தான் இந்தியாவின் ஹீரோ.எனக்கு எதாவது சிக்கல் இருந்தால், அதை உடனடியாக அவரிடம் கேட்டு அதற்கான தீர்வை பெறுவேன்.
நெருக்கடியான நேரத்தில் அமைதியாக இருந்து 100 சதவீதம் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என்ற உக்தியை தோனியிடம் தான் கற்று கொண்டேன்.உலக சாதனை படைப்பேன் என்று நிச்சயமாக நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சில மைல்கற்கள் நல்லது தான்" என தெரிவித்தார்.