'தன் பெயரில் பெவிலியன்...திறந்து வைக்கமாட்டேன்'...'தோனி' சொன்ன காரணம்...கொண்டாடும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 07, 2019 10:33 AM
தோனியின் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியனை திறந்து வைக்க தோனிக்கே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,அந்த அழைப்பை அவர் அன்பாக மறுத்துள்ளார்.அதற்காக அவர் சொன்ன காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
![MS Dhoni declines invitation to inaugurate the ‘Dhoni Pavilion’ MS Dhoni declines invitation to inaugurate the ‘Dhoni Pavilion’](http://tamil.behindwoods.com/news-shots/images/tamil-news/ms-dhoni-declines-invitation-to-inaugurate-the-dhoni-pavilion.jpg)
ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த இந்திய கேப்டன் மகேந்திர சிங் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்,இந்திய அணி தத்தளிக்கும் நேரத்தில் ஆலோசனை வழங்கி அணியினை வெற்றிக்கு அழைத்து செல்லும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.வருகின்ற உலகக்கோப்பை போட்டியானது தோனிக்கு மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.உலகக்கோப்பைக்கு பின்பு அவர் ஓய்வு பெறலாம் என கருதப்படுகிறது.
தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெறுகிறது. ராஞ்சி தோனியின் சொந்த ஊா் என்பதால் அவரை கௌரவிக்கும் வகையில் அந்த மைதானத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள கேலரிக்கு எம்.எஸ்.தோனி பெவிலியன் என்று பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே இந்த மைதானத்தில் இன்று முதல் இரு அணியினரும் பயிற்சியில் ஈடுபடும் நிலையில்,இந்திய வீரர்கள் முன்னிலையில் பெவிலிய’னை திறந்து வைக்க வருமாறு தோனிக்கு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்தது.ஆனால் அதனை அன்பாக மறுத்த தோனி ''நானே அந்த கேலரியை திறந்து வைத்தால் சொந்த ஊரில் அந்நியனாக நினைக்கத் தோன்றும்'' என கூறிவிட்டார்.தோனியின் பதில் அனைவரையும் ஆச்சரியப் படவைத்துள்ளது.
JSCA Stadium, Ranchi. 3rd ODI, #INDvAUS. @IExpressSports pic.twitter.com/7IxCNNpWct
— Shamik Chakrabarty (@shamik100) March 6, 2019
![](https://www.behindwoods.com/images/spacer.gif)