'தோனி,ஸ்டெம்ப் மைக்கில்...அப்படி பேசுவாருன்னு நான் நினைக்கவே இல்ல'...வைரலாகும் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Jeno | Feb 04, 2019 09:51 PM
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது,எனது தாய்மொழியிலேயே தோனி அட்வைஸ் செய்தது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்ததாக,கேதர் ஜாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது ஒரு நாள் போட்டிகளை முடித்ததோடு,4-1 என்ற கணக்கில் கோப்பையையும் கைப்பற்றியது.அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியின் போது,தோனி நியூசிலாந்து வீரர் நீஷமை ரன் அவுட் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தோனி எப்போதுமே பந்துவீச்சாளர்கள் செய்யும் சிறு தவறுகளை கவனித்து அவர்களுக்கு அட்வைஸ் செய்வது வழக்கம்.அவ்வப்போது அவர்களுக்கு ஐடியாகள் கொடுப்பதும் வழக்கம்.முன்னதாக ஒரு பேட்டியின் போது ``தோனி சொல்லும் இடத்தில் நான் பந்துவீசுவேன். அதுதான் எனது பந்துவீச்சின் ரகசியம்” என கேதர் ஜாதவ் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது தோனி,கேதர் ஜாதவ்விடம் பேசிய உரையாடல் தான் தற்போது வைரலாகியுள்ளது.பொதுவாக வீரர்கள் பேசிக்கொள்ளும் போது எதிரணிக்கு புரியக்கூடாது என்பதற்காக,ஹிந்தியில் பேசுவது வழக்கம்.ஆனால் நேற்று 39-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசும் போது,தோனி கேதர் ஜாதவின் தாய்மொழியான மராத்தி மொழியில் பேசினார்.``மீண்டும் மீண்டும் அதேபோன்று வீசாதே.... அவரின் விக்கெட்டை வீழ்த்து” என மராத்தியில் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியிருந்தது.
தோனியின் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக,அது தொடர்பான செய்தி பத்திரிகை ஒன்றில் வெளியானது.அந்த செய்தியினை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த கேதர் ஜாதவ், ``தோனி மராத்தியில் பேசியது உண்மையிலே பெரிய சர்ப்ரைஸ். வெளிநாட்டில் விளையாடினாலும் தோனி ஸ்டம்புக்குப் பின்னால் நின்றால், சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வு இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.தற்போது தோனியின் ஸ்டெம்ப் உரையாடல் வைரலாகி வருகிறது.
पुढे नको भाऊ…घेऊन टाक !! धोनीचं केदार जाधवला मराठीतून मार्गदर्शन @DHONIism @BleedDhonism @odishamsdians @AKDFAOfficial @PradipMsd7 @dhoniraina_team @msdfansofficial @LoksattaLive @CricSuperFan #MSDhoni #Dhoni #NZvsIND #kedarjadhav #मराठी #म #महाराष्ट्र #क्रिकेटजगत pic.twitter.com/idKxzQfjDX
— Maharashtra Msdian Club (@MHMsdianClub) February 4, 2019
You always feel at home on foreign tours when @msdhoni is behind the stumps... But This moment came as a real surprise...#घेऊन_टाक https://t.co/AhXAwjeFiK
— IamKedar (@JadhavKedar) February 3, 2019