'வெய்டிங் இஸ் ஓவர்'...'சச்சின், கங்குலி வரிசையில் நம்ம ''தல''...புதிய சாதனை படைத்து அசத்தல்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 12, 2019 02:01 PM

சச்சின், கங்குலி, டிராவிட், கோலி ஆகியோர் வரிசையில் 10 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் தோனி.

MS Dhoni 5th batsman to score 10,000 ODI runs for India

முன்னாள் இந்தியக் கேப்டன் தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 173 ரன்கள் சேர்த்துள்ளார்.இதில் 174 ரன்கள் என்பது ஆப்பிரிக்கா லெவன் அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது ஆசிய லெவன் அணியில் தோனி அடித்த ரன்னாகும்.இதனால் இது தோனியின் தனிப்பட்ட சர்வதேச ஸ்கோராக இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில்,தோனி எடுத்த ஒரு ரன் மூலம்,சர்வதேச ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.9 ஆயிரத்து 999 ரன்களில் இருந்த அவர்,இந்த போட்டியின் மூலம் பல நாளாக எதிர்பார்க்கப்பட்ட சாதனையை நிறைவேற்றி அசத்தினார்.

இந்த சாதனையின் மூலம் சர்வதேச அளவில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 13-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Tags : #MSDHONI #INDIA VS AUSTRALIA #10 #000 ODI RUNS