உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உன்னோ மாவட்டத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் மருத்துவ ஆய்வொன்றை நடத்தியது. ஆய்வில் சுமார் 40 பேருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தெரிய வந்தது.
போலி மருத்துவர் ஒருவர் ஒரே ஊசியைத் தொடர்ந்து பயன்படுத்தியதன் மூலம், ஹெச்ஐவி பாசிட்டிவ் உள்ள நபரிடமிருந்து பிறருக்கும் இது பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து நகர கவுன்சிலர் சுனில் கூறுகையில், "முறையாக மருத்துவ பரிசோதனை நடத்தும் பட்சத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த ஹெச்ஐவி தொற்று பரவியிருக்க வாய்ப்புகள் உள்ளது," என்றார்.
ஒரே ஊசியைப் பயன்படுத்திய போலி மருத்துவர் மீது தற்போது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
BY MANJULA | FEB 6, 2018 12:35 PM #HIV # #UTTARPRADESH #DOCTOR #ஹெச்ஐவி #உத்தரபிரதேஷ் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories