
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் ராஜஸ்தானில் உள்ள தனது உறவினர்களைப் பார்த்து விட்டு குஜராத் திரும்புகையில், கட்டுண்டா என்ற இடத்தில் அவரது கார் இன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்து உறவினர் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தைத் தொடர்ந்து, ஜசோதாபென் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
BY MANJULA | FEB 7, 2018 3:09 PM #MODI #WIFE #ACCIDENT #மோடி #மனைவி #விபத்து #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS


Read More News Stories