டெல்லியில் இன்று மாணவர்களிடையே உரையாடிய பிரதமர் மோடி சமஸ்கிருதத்தை விட தமிழே மிகத்தொன்மையான மொழி என்று கூறினார்.
"நாட்டின் மிகத் தொன்மையான மொழி எது?" என்று மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சமஸ்கிருதத்தை விட 'தமிழே மிகத் தொன்மையான மொழி' என்று பதிலளித்தார். மேலும் தமிழில் தன்னால் வணக்கம் மட்டுமே கூற முடியும் என்றும், அதற்கு மேல் பேச முடியாதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
நிகழ்ச்சி முழுவதும் இந்தி மொழியிலேயே பேசிய மோடி, மற்ற மொழி மாணவர்களிடம் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். தன்னுடைய பேச்சு மொழிபெயர்க்கப்பட்டு மற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
BY SATHEESH | FEB 16, 2018 5:57 PM #MODI #TAMIZH #தமிழ் #மோடி #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories