இடைத்தேர்தலை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை..கமல்ஹாசன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 30, 2018 05:09 PM
MNM not hesitant to take part in by-polls, says Kamal

நடிகர் கமல்ஹாசன், கடந்த வருடம் தனது பிறந்த நாளன்று தான் அரசியலுக்குள் இயங்கிக் கொண்டிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் எனும் புதிய பெயரில் கட்சியைத் தொடங்கிய கமல், பரபரப்பான அரசியல் களங்களுக்கிடையே இயங்கத் தொடங்கினார். கிராமங்களைத் தத்தெடுத்து அவற்றை மாதிரி கிராமம் திட்டம் மூலம் வளர்ச்சியடையச் செய்யும் திட்டம் உட்பட தன் பல்வேறு திட்டங்களை அறிவித்த கமல்ஹாசன், தனது அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தி  வந்தார்.

 

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் இரண்டாம் பாகத்தை தற்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் சமீபத்திய பேச்சாக, தேர்தலை பற்றிய பேச்சு பிரபலமாகியுள்ளது. இதில் அவர், தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் வரவிருக்கும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு தயங்கவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளதாகவும், ஆனால் தான் அதில் பங்கேற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

இன்றைய அரசியலின் திருப்பமாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் வருகிறது என்றும், அது ’நம் ஊர்’ என்றும் மிக அண்மையில் மக்கள் நல இயக்கம் தொடங்கிய விஷால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #KAMALHAASAN #BYPOLLELECTION #TNELECTION #MAKKALNEETHIMAIAM