
திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலைக்குச் சென்றபோது அமைச்சர் செல்லூர் ராஜுவின் செல்போன் மாயமானதாக ஒரு தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கூட்டுறவு வங்கியின் 30 வது கிளை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஜவ்வாது மலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் உணவருந்த சென்றபோது, அமைச்சரின் செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது.
மாயமான சாம்சங் செல்போனை எங்கு தேடியும் கிடைக்காததால் செல்லூர் ராஜு ஏமாற்றத்தில் திரும்பி சென்றார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
BY SATHEESH | FEB 20, 2018 9:13 AM #SELLUR RAJU #CELLPHONE #MISSED #CHENNAI #THIRUVANNAMALAI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories