கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்க முடியாது.. கமலை விமர்சித்த அமைச்சர்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 31, 2018 06:25 PM
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவிருக்கும் இடைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். திருப்பரங்குன்றத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இடைத் தேர்தல் வரவிருக்கிறது. அதில் நிற்கவிருப்பதாக அனைத்து கட்சியினரும் கூறி வருவதுபோலவே கமலும் தங்கள் கட்சிக்கு இடைத் தேர்தலில் நிற்க தயக்கம் ஒன்றும் இல்லை என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’நடிகர் கமல், கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதனையடுத்து, கமலை சீண்டி இடைத்தேர்தலில் போட்டியிட செய்தால் அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்கிற நப்பாசைதான் தற்போது கமல் மீதான அமைச்சர்களின் தொடர்ச்சியான விமர்சனம் என அரசியல் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Tags : #KAMALHAASAN #MAKKALNEETHIMAIAM