
அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடிய ரவுடியின் பிறந்தநாள் விழாவில், சுமார் 75 ரவுடிகளை சினிமா பாணியில் சென்னை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
பள்ளிக்கரணை அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாகப் பைக்கில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
பினு என்பவரின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சக போலீசாரை அலெர்ட் செய்து இந்த கைது படலத்தை போலீசார் நடத்தியுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடிய பினு தேடப்படும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 7, 2018 12:46 PM #POLICE #ROWDY #சென்னை #போலீஸ் #ரவுடி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories