“வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார்” :மத்திய இணை அமைச்சர் மீது மற்றொரு பெண் புகார்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 17, 2018 01:08 PM
Me Too India:Woman No. 15 Comes Out Against Central Minister MJ Akbar

மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில்,15-வது நபராக மற்றொரு பெண் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

 

அக்பர், மத்திய அமைச்சராகும் முன்பு பல்வேறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.அந்த காலகட்டங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 14 பத்திரிகையாளர்கள் அவர் மீது புகார் கூறியுள்ளனர்.அவர்களில் முதலில் புகார் தெரிவித்த பிரியா ரமணி என்பவர் மீது மான நஷ்ட வழக்கை அக்பர் தொடர்ந்திருக்கிறார்.

 

இந்நிலையில் துஷிதா படேல் என்கிற அந்தப் பெண், தி எசியான் ஏஜ் பத்திரிகையில் அக்பர் ஆசிரியராக இருந்தபோது அங்கு பணியாற்றியிருக்கிறார். அப்போது அக்பர் பாலியல் தொந்தரவு அளித்ததாக துஷிதா புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் “எம்.ஜே. அக்பர் வலுக்கட்டாயமாக இருமுறை முத்தம் கொடுத்தார். ஒருமுறை ஓட்டல் அறையில் தங்கிருந்த அவர் உள்ளாடையுடன் என்னை வரவேற்றார்.

 

மேலும் கடந்த 1992-ம் ஆண்டு  இன்னொரு பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது எனது  தொலைப்பேசிஎண்ணை  பெற்றுவிட்டு அலுவல் அல்லாத காரணங்களுக்காக என்னை தொடர்ந்து அழைப்பார்.ஒருமுறை வேலை சம்மந்தமாக அவரை ஹோட்டல் அறையில் சந்தித்தபோது, வலுக்கட்டாயமாக எனக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். நான் அவரை உதறி தள்ளிவிட்டு  சாலைக்கு ஓடிச் சென்றேன்" என்பது போன்ற  தகவல்கள் அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

 

மேலும் மத்திய அமைச்சர் அக்பர்க்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.அவரை நான் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்.அவர் பொய் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும்  துஷிதா படேல்  தெரிவித்துள்ளார்.

Tags : #METOO #METOOINDIA #MJ AKBAR