'இந்த சாதனையை முறியடிக்க 71 வருஷம்'...ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்த இந்திய வீரர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 26, 2018 02:38 PM
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில்,71 வருடத்திற்கு பிறகு புதிய சாதனையை படைத்திருக்கிறார் இந்திய துவக்க வீரர் மாயங்க் அகர்வால்.
ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.அதன் பின்பு ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.இந்நிலையில் டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாளான இன்று 'பாக்சிங் டே' என ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது,ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
நிதானமான ஆட்டத்தை தொடங்கிய இந்திய வீரர்களில்,விஹாரி சொற்ப ரன்னில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார்.ஆனால் மறுமுனையில் நிதானமாகவும்,அதிரடியாகவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாயங்க் அகர்வால் (76) அரைசதம் அடித்து வெளியேறினார்.
இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுக வீரராக களமிறங்கி, அறிமுக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் மாயங்க் அகர்வால்.மேலும் தனது அரைசதம் மூலம் அறிமுக போட்டியில், துவக்க வீரராக களமிறங்கி அரைசதம் அடித்த ஏழாவது வீரர் என்ற பெருமை பெற்றார் மாயங்க் அகர்வால்.