சட்ட விரோதமாக பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை சிபிஐ நீதிமன்றம்.
மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, சட்ட விரோதமாக அதிவேக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், முகாந்திரம் இல்லையென கூறி தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து, இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
BY SATHEESH | MAR 14, 2018 5:49 PM #MARANBROTHERS #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories