'வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த இளைஞர்'.. காரை பரிசாக அளித்த சி.இ.ஓ!

Home > News Shots > தமிழ்

By |
Man walks 20 miles at work, get CEO\'s Car

வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த இளைஞருக்கு,தனது காரை சி.இ.ஓ பரிசாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் அலபாமா நகரை சேர்ந்த வால்டர் என்னும் இளைஞருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. மறுநாள் வேலைக்கு செல்ல முதல்நாள் தனது பழைய காரை தயார் செய்த வால்டர், அந்த கார் ரிப்பேர் ஆனதைக்கண்டு திகைத்துள்ளார்.

 

நகரத்திற்கு வெளியே வசித்து வந்ததால் அவசரத்திற்கு அவரால் வேறு வாகனத்தையும்  ஏற்பாடு செய்ய முடியவில்லை. மேலும் காரினை ரிப்பேர் செய்யும் அளவுக்கு அவரிடம் பணமும் இல்லை. இதனால் முதல் நாள் இரவே தான் வேலைக்கு செல்லும் நிறுவனத்துக்கு நடந்து செல்ல துவங்கியுள்ளார்.

 

அலபாமா நகரில் இருந்து பெல்ஹாம் என்னும் இடம் வரை சுமார் 32 கிலோமீட்டர் நடந்து சென்ற அந்த இளைஞரை, வழியில் கண்ட பெல்ஹாம் காவல்துறையினர் தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டுள்ளனர். இவரின் கதையைக் கேட்ட ஜெனிஃபர் என்பவர் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட, அவருடைய பதிவு ஒரேநாளில் வைரலானது. இதைக்கண்ட பெல்ஹூப்ஸ் மூவிங் நிறுவன சி.இ.ஓ தனது சொந்த காரை அந்த இளைஞருக்கு பரிசாக அளித்து, அனைவரையும் நெகிழச் செய்துள்ளார்.

Tags : #AMERICA

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man walks 20 miles at work, get CEO's Car | தமிழ் News.