திருடிய பணத்தை தானம் செய்த 'கொடை வள்ளல்' திருடன்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 26, 2018 12:43 PM
ரூபாய் 80 லட்சம் பணத்தைத் திருடிய திருடன், அதனை தானம் செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மும்பை சேர்ந்த கொரியர் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்த ரமேஷ் பாய்(35) என்பவர், அந்த கம்பெனியில் இருந்து சுமார் 80 லட்சத்தைத் திருடிவிட்டு தலைமறைவாகி விட்டார்.இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் வைத்து போலீசார் ரமேஷைக் கைது செய்துள்ளனர்.
அப்போது அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 118 பவுன் நகைகள், விலையுர்ந்த 5 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருடிய பணத்தை கோயில்களுக்கு நன்கொடையாக ரமேஷ் அளித்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பிச்சைக்காரர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை பிச்சை போடுவதையும் ரமேஷ் வாடிக்கையாக செய்திருக்கிறார்.
பிச்சைக்கார்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை ரமேஷ் அளிப்பதை பார்த்த உள்ளூர் போலீசாருக்கு அவர் பெயரில் சந்தேகம் எழ, விளைவாக ரமேஷின் திருட்டுத்தனம் தற்போது வெளியில் வந்துவிட்டது.