ஸ்பைடர்மேனாக வந்து வைரல்மேனாகிய வங்கி ஊழியர்.. இதுதான் காரணம்!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Jan 29, 2019 04:43 PM
தன்னுடைய கடைசி வேலைநாளில் ஸ்பைடர்மேன் உடை அணிந்து சென்ற இளைஞரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வேலைசெய்து கொண்டிருக்கும் அனைவரும் தாங்கள் பணிபுரியும் கம்பெனியைவிட்டு செல்லும் போது ஒருவித சோகம் இருக்கும். தங்களுக்கு பிடித்த வேறொரு சிறந்த வேலைக்கு செல்வதாக இருந்தாலும் முன்பு இருந்த சக பணியாளர்களை பிரிந்து செல்கின்ற ஏக்கம் அனைவரது மனதிலும் இருக்கும்.
ஆனால் வங்கி ஊழியர் ஒருவர் தன்னுடை கடைசிநாள் பணிக்கு செல்லும் போது ஒரு விநோதமான உடை அணிந்து சென்று அன்றைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார். அவர் ஹாலிவுட்டில் பிரபலமான ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் வரும் கதாநாயகனைப் போல் உடை அணிந்து வங்கிக்கு சென்றுள்ளார்.
பின்னர் வழக்கம் போல தலையில் ஹெட்செட்டை மாட்டிகொண்டு தனது பணியை தொடர்ந்துள்ளார். இதனைக் கண்ட சக ஊழியர்களுக்கு சிரிப்பாகவும் வியப்பாகவும் இருந்துள்ளது. ஸ்பைடர்மேன் உடையிலிருந்த அவரை சக ஊழியர் ஒருவர் புகைப்படம், வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பலரும் நகைச்சுவையாக தங்களது கருத்துக்களை கமெண்ட் இட்டுள்ளனர். அதில் ஒருவர், ‘கடைசி நாள் என்பதால் இப்படி உடை அணிந்து வந்தாரா, இல்லை இந்த உடை அணிந்ததால் அது கடைசி நாள் ஆனதா?’ என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். அலுவலகத்துக்கு ஸ்பைடர்மேன் உடை அணிந்து வந்த இந்த நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.