'வயிறு இல்லாமல் வாழப்போகும் நபர்'...இறுதியாக பிரியாணி சாப்பிட்ட நெகிழ்ச்சி சம்பவம்!
Home > News Shots > தமிழ்By Jeno | Sep 25, 2018 11:03 AM
வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்று நோயின் காரணமாக ஒட்டுமொத்த வயிற்றையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு முன்னர், இளைஞர் ஒருவர் கடைசியாக பிரியாணி சாப்பிட வேண்டும் என கோரிக்கை வைத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாஸ்க்கு வயிற்றில் நீண்ட நாட்களாக வலி இருந்தது. அதனால் அவர் உடல் எடையும் வேகமாகக் குறைந்து கொண்டே வந்தது. இதனால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது தான் அந்த அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வயிற்றில் புற்று நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதனால் அவர் நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.
அப்பாஸ் தொடர்ந்து சிகிச்சை எடுத்த போதிலும் நிலைமை மிகவும் மோசமாகி அவர் வயிற்றில் பெரிய கட்டி உருவானது. அது அவர் வயிற்றையே அடைத்துவிட்டது. இதனால் உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்.இதைத்தொடர்ந்து, வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதே சிறந்தது என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். இதனால் மிகவும் கடின மனதுடன் அப்பாஸ் அதற்கு ஒப்புக்கொண்டார்.ஆனால், வயிறு அகற்றப்படுவதற்கு முன், தனக்குப் பிடித்த சிக்கன் பிரியாணியை கடைசியாக சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்களிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து, குலாம் அப்பாஸ் மனைவி சமைத்துக் கொண்டுவந்த பிரியாணியைக் கடைசியாக அவர் ருசித்துச் சாப்பிட்டார். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிறு அகற்றப்பட இருக்கிறது.
இது குறித்து லேப்ரோஸ்கோபி நிபுணர் அலி கம்மாஸ் கூறுகையில்,''இதற்கு முன்னர் வயிற்றில் இரைப்பை அல்லது வேறு ஏதேனும் உறுப்பு நீக்க அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த வயிற்றையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது என்பது எங்கள் மருத்துவமனையில் இதுதான் முதன்முறை,'' என தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது வயிறு அகற்றப்பட்ட பிறகு அவர் வாழ்க்கை முறை கடினமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. திரவ உணவைத்தவிர வேறு எதையும் சாப்பிட முடியத நிலை ஏற்படும் என்பதே வருத்தமான உண்மை.