நாட்டிலேயே முதன்முறையாக..ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும் மதுபானம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 14, 2018 07:47 PM
குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், இதனைத் தடுக்க வீட்டிற்கே சென்று மதுபானங்களை வழங்கும் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களால் சாலை விபத்துகள் தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளன. சாலை விபத்துகளை குறைப்பதற்கும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களை கட்டுப்படுத்தவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் விபத்துக்களைக் குறைக்க மதுபானங்களை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக, அம்மாநில அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்துள்ளார்.
Tags : #LIQUOR #MAHARASHTRA