ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதன் முழு பின்னணி என்ன?
Home > News Shots > தமிழ்By Satheesh | Mar 31, 2018 08:53 PM
நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி, துபாய்க்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவர் தங்கியிருந்த விடுதியில் வைத்து மரணமடைந்தார்.
அதன் பின்பு, அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அனில் கல்காலி, ஸ்ரீதேவிக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு அம்மாநில நிர்வாகத்துறை வழங்கிய பதிலில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் உத்தரவின் பேரிலேயே அரசு மரியாதை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அலுவலகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டதாகவும், பின்பு மும்பை காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு முழு அரசு மரியாதை வழங்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.