எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவின் திறப்பு விழாவுக்கு தடை: உயர் நீதிமன்றம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 19, 2018 07:22 PM
சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த தடை உத்தரவுக்கு தமிழக அரசு ஜனவரி 21-ம் தேதிக்குள் பதில் அளிக்கவும், உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் வழக்கு முடியும் வரை எம்ஜிஆர் வளைவை திறக்க கூடாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறப்பதில் காலதாமதல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரமிப்பாக கருதவேண்டும் என்று எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க இடைக்கால தடை விதித்துள்ள உயர்நீதிமன்றம், அதே சமயம், தற்போது கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தால், அந்த கட்டுமான பணிகளை தொடரலாம் என்றும், திறப்புவிழா மட்டும் கூடாது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : #MADRASHIGHCOURT #MGR #AIADMK #EDAPPADIKPALANISWAMI #MGRARCH #TAMILNADU #MARINA #CHENNAI