சின்மயி உள்ளிட்ட பல பெண்களின் 'பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு' வைரமுத்து பதில்!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 10, 2018 03:12 PM
கடந்த ஆண்டு ட்விட்டரில் #MeToo என்னும் ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாகியது. காரணம் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை இந்த ஹேஷ்டேக்கில் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபலங்களும் தங்களுக்கு நடைபெற்ற அநீதிகளை இதில் பதிவிட்டனர். இதனால் இந்த ஹேஷ்டேக் மிகவும் பிரபலமடைந்தது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என ஒருசில பெண்கள் இந்த #MeToo ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்தனர். இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதவிர சின்மயியும்,வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கவிஞர் வைரமுத்து தற்போது பதிலளித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்,'' என தெரிவித்து இருக்கிறார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018