பறந்து கொண்டிருந்த 'இங்கிலாந்தை' குல்தீப் தரையிறக்கி விட்டார்:விராட் கோலி
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 04, 2018 08:34 PM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் இயன் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை மிக அருமையாக வீழ்த்தினார். முதல் டி20 போட்டியில் கே.எல்.ராகுலின் அதிரடி சதமும்(101), குல்தீப்பின் விக்கெட் வேட்டைகளும் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளது.இதனால் 1-0 என இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட்கோலி, "அவர் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் எந்த ஒரு பிட்சிலும் அவர் நிச்சயம் அபாயகரமாகத் திகழ்வார். இதே திறமையில் அவர் மேலும் வளர்ச்சியடைந்து பேட்ஸ்மெனை எப்போதும் யோசனையில் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்.ரன் விகிதத்தில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தை குல்தீப் தனது ஒரே ஓவரில் வீழ்த்தி விட்டார்.
இங்கிலாந்து 30-40 ரன்கள் குறைவாக எடுத்தது குறித்து மகிழ்ச்சியே.ராகுலின் இன்னிங்ஸ் நம்ப முடியாத அதிரடியாகும். மிகவும் துல்லியமாகவும்,நீட்டாகவும் அவர் அடிக்கிறார். பேட்டிங்கை வலுவாக்க இவரைப்போன்ற ஆட்டக்காரர்கள் தேவை.பவர் பிளேயில் ராகுல் அதிரடியாக ஆட வேண்டும்,''என தெரிவித்துள்ளார்.