கடந்த 11-ஆம் தேதி, தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது, காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சக்திகலாவைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அதுல்ய மிஸ்ராவை, விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | MAR 16, 2018 3:29 PM #THENIFORESTFIRE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories