இந்திய வீரர்கள் இப்படி செய்வது 'கிரிக்கெட்டுக்கு அழகல்ல'... இங்கிலாந்து வீரர் காட்டம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 06, 2018 04:49 PM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் குல்தீப் யாதவ் வெறும் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.போட்டியின்போது இந்திய வீரர்கள் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீசும் கடைசி நேரத்தில், பந்து வீசாமல் திரும்பிச் சென்று மீண்டும் பந்து வீசும் யுக்தியை கடைபிடித்தனர்.
இந்தநிலையில் 'இது கிரிக்கெட்டிற்கு அழகல்ல' என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " நான் பேட்டிங் செய்யும்போது அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள இருக்கிறேன் என்று புவனேஸ்வர் தெரிந்து கொண்டார். இதனால் அவர் பந்து வீச்சை நிறுத்திக் கொண்டார். இப்படி சிலமுறை நடைபெற்றது.
அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து கருத்து சொல்லும் வேலை என்னுடையதல்ல. எனினும் இது சிறந்த வழி என்று நினைக்கமாட்டேன்,'' இவ்வாறு அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'குல்தீப் யாதவ் எங்களை ஏமாற்றி விட்டார்'.. புலம்பித்தள்ளிய கேப்டன்!
- INDvsENG: Virat Kohli becomes fastest to score 2000 T20I runs
- இந்தியாவுக்கு பின்னடைவு:இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா-சுந்தர் நீக்கம்!
- ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் ஜிவா.. வீடியோ உள்ளே!
- அயர்லாந்துக்கு எதிராக ஓய்வு.. தோனி என்ன செய்தார் தெரியுமா?