'வழி விடு...வழி விடு'...ஆம்புலன்ஸ் செல்ல 'தீயா' நின்ற காவலர்...அனைவரின் ஹார்ட்ஸை அள்ளிய வீடியோ!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 31, 2018 03:37 PM
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழியேற்படுத்தி கொடுத்த காவலரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில்,நேற்று விடுமுறை தினம் என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.அப்போது அடிபட்ட ஒருவரை எற்றி கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனம்,கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது.இதனால் ஆம்புலன்ஸை ஓட்டுநர் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றார்.அப்போது அங்கு இருந்த போக்குவரத்து காவலர்,சாலையின் நடுவில் நின்ற வாகனங்களை ஓரமாக போக செய்து ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழியேற்படுத்தி கொடுத்தார்.
மேலும் ஆம்புலன்ஸ் வாகனதிற்கு முன்பாக ஓடி சென்று,வழியெங்கிலும் இருந்த வாகனங்களை ஓரமாக செல்ல அறிவுறுத்தினார்.அவர் ஓடி ஓடி வழி ஏற்படுத்தும் காட்சிகளை ஆம்புலன்ஸில் உள்ளவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலிலிருந்து வெளியில் வரும் வரை அதற்கு முன்னாலே ஓடிச் சென்று வழி ஏற்படுத்தித் தந்த காவலர்,ரெஞ்சித் குமார் நாதாகிருஷ்ணனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன