வெள்ளத்தில் மிதந்துவரும் சூடான டீ.. மெல்லத் திரும்பும் கேரள மக்களின் இயல்புநிலை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 21, 2018 12:56 PM
கேரள சேட்டன்கள் என்றாலே நமக்கு நியாபகம் வருவது ’கட்டன் சாயா’தான். கேரளாவின் சீரான பருவநிலைக்கு உகந்த தேநீராக அவர்களுக்கு கட்டன் சாயா இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் கூட அநேகமான கேரளாக்காரர்கள் சிறுதொழில் ஒன்றை தொடங்க வேண்டும் என்று வந்தால் அவர்கள் தேர்ந்தெடுப்பது ‘டீக்கடை’தான். 'நாயர் டீ கடைகள்' என்றே அவற்றை நாம் அழைப்பதுண்டு.
கேரளாவின் வண்டிபெரியார் தேயிலை பயிரிடப்படும் முக்கியமான இடம். அங்கிருக்கும் எஸ்டேட்கள் தொடர்ந்து தேயிலையை உற்பத்திச் செல்கின்றனர்.
சுமார் 4500 வருடங்களுக்கு முன்பு சீனாவில் சீனர்கள் கியா என்ற பெயரில் தேயிலையை பயன்படுத்தினர். பின்னாளில் அது ’சா’ என்று பிரிட்டிஷ் காலத்தில் மாற்றப்பட்டது. டார்லிஜிங், ஆசாம், கேரளா, தமிழகத்தில் நீலகிரி போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
இந்த சாயா, ஷென் நங் என்ற ஒரு மருத்துவரின் ஆராய்ச்சின்போது தவறுதலாக தேயிலை வெண்ணீரில் விழ, அதில் இருந்து அதன் மணம், சுவையை அறிந்து பயன்படுத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அவ்வகையில் தற்போது கேரள சேட்டன்கள் வெள்ளம் சூழ்ந்த டீக்கடையில் டீக்குடித்துக்கொண்டிருப்பது கட்டன் சாயாவுக்கும் கேரளர்களுக்கும் இருக்கும் பந்தத்தை நிரூபித்துள்ளது.
கேரளா முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இடுப்பளவு தண்ணீரில் அனைவரும் நடந்து செல்லும் நிலையில் உள்ளனர். அதிதீவிர இயற்கை பேரிடராக கேரளாவின் இந்த கனமழை சீசன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு வீடியோ ஒன்று வலம் வந்துள்ளது. அதில் இடுப்பளவு தண்ணீரில் நின்று, டீ ஆற்றுகிறார் கேரள மாஸ்டர். டீ போட்டுவிட்டு அனைத்தையும் ஒரு ட்ரேவில் வைத்து தண்ணீரில் மிதக்கவிடுகிறார். அதனை சிறிது தூரத்தில் இருக்கும், கேரள இளைஞர்கள் தங்களருகே மிதந்தபடி வரும் ட்ரேயில் இருந்து டீ எடுத்துக் கொள்கின்றனர். இந்த வீடியோ வாட்ஸாப்பில் வலம் வந்தபடி இருக்கிறது.