எளிமையில் மட்டும் அல்ல,சேவையிலும் முன்மாதிரியான கேரள மந்திரி !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 17, 2018 01:02 PM
இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை கேரள மக்களுக்கு அவ்வளவு இனிமையான ஒன்றாக அமையவில்லை. கேரளாவையே புரட்டி போடும் அளவிற்கு கனமழையும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.
இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான அழிவாக கருதப்படுகிறது. கேரளாவின் பல பகுதிகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பல மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பல பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.இந்திய முப்படையை சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது தொகுதியானா ஆலப்புழா பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.நிதி அமைச்சரான அவர் வெறும் மேற்பார்வை பணிகளில் மட்டும் ஈடுபடாமல் களத்தில் இறங்கி மீட்பு படையினருடன் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
மக்களை மீட்பது,பாதுகாப்பு படையினரை ஒருங்கிணைப்பது,மக்களை முகாம்களில் தங்கவைப்பது மற்றும் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.