ஆறாக மாறிய கொச்சின் விமான நிலையம்..வைரலாகும் வீடியோ !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 16, 2018 02:38 PM
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
கேரளாவின் பல பகுதிகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பல மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பல பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான கொச்சின் விமான நிலையம் முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக கொச்சி வரும் விமானங்கள் திருவனந்தபுரம் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மேலும் சனிக்கிழமைவரை கொச்சின் விமான நிலையம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொச்சின் விமான நிலையத்தில் ஆறாக ஓடும் வெள்ளத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
It’s not the scenic backwater of the Gods Own Country, but the busiest Cochin Intl Airport. #Rain Fury at # Kerala pic.twitter.com/l3HhXOGZTt
— Dhinesh Kallungal (@Dinesh_TNIE) August 15, 2018