MIC Anthem Mobile BNS Banner
பார்த்திபனோட வருங்கால 'மாப்பிள்ளை' இவர்தான்!

நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா திருமணம் வருகின்ற மார்ச் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த செய்தியினை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.

 

'கன்னத்தில் முத்தமிட்டால்' அமுதா பாப்பாவுக்கு கல்யாணம்

 

எனினும் மாப்பிள்ளை யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை 'சஸ்பென்ஸ்' ஆகவே இருந்து வந்தது. இந்த நிலையில், மணமகன் யார்? என்பது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

அதன்படி, இந்திய சினிமாவின் தலைசிறந்த எடிட்டர்களில் ஒருவரான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன், அக்ஷய் அக்கினேனி தான் கீர்த்தனாவை மணம் புரியவிருக்கிறார்.

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த 'பீட்சா' படத்தை, அக்ஷய் இந்தியில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories