
அமெரிக்கா-பங்களாதேஷ் இடையிலான விமானம் இன்று மதியம் நேபாளத்தில் உள்ள காத்மாண்டு விமானநிலையத்தில் தரையிறங்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 67 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய சுமார் 17 பேர் இதுவரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சமீபத்திய தகவல்களின்படி விபத்தில் சுமார் 50 பேர் வரை இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கோர விபத்து காரணமாக காத்மாண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | MAR 12, 2018 7:40 PM #KATHMANDUPLANECRASH #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories