'கருணாநிதி கவலைக்கிடம்'.. முதல்வருடன் மு.க.ஸ்டாலின் 'திடீர்' சந்திப்பு
Home > News Shots > தமிழ்By Manjula | Aug 07, 2018 03:00 PM
![KarunanidhiHealth: MK Stalin meets Edappadi Palanisamy KarunanidhiHealth: MK Stalin meets Edappadi Palanisamy](https://i2.behindwoods.com/news-shots/images/tamil-news/karunanidhihealth-mk-stalin-meets-edappadi-palanisamy.jpg)
கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும் காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கழக நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.சந்திப்பின்போது கனிமொழி,மு.க.அழகிரி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் உடனிருந்தனர்.இதனால் தொண்டர்கள், கழக நிர்வாகிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)