அண்ணாவின் தம்பிக்கு 'மெரினாவில்' இடமில்லையா?.. தொண்டர்கள் ஆவேசம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Aug 07, 2018 11:43 PM
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அதில் எவ்வளவு சிகிச்சை அளித்தும் கருணாநிதியை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ்,நீதிபதி சுந்தர் ஆகிய இருவரும் மனுவை தற்போது அவசர வழக்காக விசாரித்து வருகின்றனர்..
இந்தநிலையில் அண்ணாவின் தம்பிக்கு மெரினா சமாதியில் இடமில்லையா? என கொதிப்படைந்த திமுக தொண்டர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு தங்கள் கோபத்தைக் காட்டினர். மேலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தி #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.