'மெரினாவில் இடம் ஒதுக்க' முதல்வரிடம் கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை: ஸ்டாலின்
Home > News Shots > தமிழ்By Manjula | Aug 08, 2018 02:03 PM
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தற்போது ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக கழகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சற்றுமுன் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தும் அவர் செவிசாய்க்கவில்லை.திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டிற்காக போராடிய திமுக தலைவர் கருணாநிதிக்கு மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் வெற்றி கிடைத்துள்ளது.தொண்டர்கள் கலைந்து சென்றால் தான் அவரது இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கும்,'' இவ்வாறு அவர் பேசினார்.