ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை 12 நாட்கள் திகார் சிறையிலடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து பல நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ போலீசார், இன்று அவரை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த சிபிஐ நீதிமன்றம், அவரை மார்ச் 24 ஆம் தேதி வரை (12 நாட்கள்) டெல்லி திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
BY SATHEESH | MAR 12, 2018 3:43 PM #KARTICHIDAMBARAM #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories