
கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கும் இப்படத்தில், ஹீரோவாக கார்த்தியும், ஹீரோயினாக ரகுல் பிரீத்தி சிங்கும் நடிக்கின்றனர். இதுதவிர 'நவரச நாயகன்' கார்த்திக் இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 8-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து, ஐரோப்பாவில் 15 நாட்களும், அதைத்தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, இமயமலை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
BY MANJULA | MAR 3, 2018 3:46 PM #KARTHI #RAKULPREETSINGH #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories