ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை ஆஜர்படுத்திய சிபிஐ போலீசார், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஒரு நாள் காவலில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து சிபிஐ நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை மேலும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. கார்த்தி சிதம்பரம் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் ஆவார்.
BY SATHEESH | MAR 1, 2018 7:53 PM #KARTICHIDAMBARAM #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories