
சைவத்திலிருந்து தோன்றிய ஒரு சமயப் பிரிவான லிங்காயத்துகள், தங்களை தனிமதமாக, சிறுபான்மையினராக அங்கீகரிக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று, லிங்காயத்துகளை தனி மதமாக கர்நாடக அரசு அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
லிங்காயத்துகளை தனிமதமாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்க, நீதிபதி நக்மோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு லிங்காயத்துகளை தனிமதமாக அங்கீகரிக்கலாம் என பரிந்துரைத்தது.
இதனையடுத்து, லிங்காயத்துகளை தனிமதமாக அங்கீகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கவும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரைக்க உள்ளது.
BY SATHEESH | MAR 19, 2018 5:09 PM #KARNATAKA #LINGAYAT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories