
கன்னியாகுமரி மாவட்டத்தில், குழந்தைகள் இருக்கும் வீட்டின் முன்பு வடமாநில கும்பல் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிவிடுவதாகவும், பின்பு குழந்தைகளை கடத்தி வருவதாகவும் வதந்தி பரவி வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி அருகே மணக்குடி என்ற கிராமத்தில், தனது பசிக்கு உணவருந்த வீடு வீடாக சென்று உணவு கேட்ட மூதாட்டியை, குழந்தைகள் கடத்துபவர் என அப்பகுதி இளைஞர்கள் சிலர் தவறாக நினைத்துள்ளனர்.
மேலும், அம்மூதாட்டியை பிடித்து மரத்தில் கட்டிவைத்த சிலர், பின்னர் மணக்குடி கடலில் தூக்கி வீசியுள்ளனர்.
மூதாட்டி அப்பாவி என தெரிந்தபின்பு, அந்த இளைஞர்கள் மூதாட்டியை விடுவித்த நிலையில், இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
BY SATHEESH | MAR 22, 2018 11:49 AM #KANYAKUMARI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories