நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தன் அனுமதியின்றி தன்னை கமலஹாசனுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
அதில், "உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது.உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம்" என, தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழிசை தன் இணையதளத்தில் இருந்து அவருடைய விபரங்களை கொடுத்ததற்கான ஆதாரம் எனக் கூறி ஒரு ஆவணத்தையும் பதிவேற்றியுள்ளனர்.
உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ? (Part-I) pic.twitter.com/JoyGrx44CO
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால்
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018
செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ...
பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II) pic.twitter.com/zlJh6Chll7
BY SATHEESH | MAR 14, 2018 10:33 AM #TAMILISAISOUNDARARAJAN #MAKKALNEEDHIMAIAM #KAMALHAASAN #BJP #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS