காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு வரும் காலங்களில் 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும்.
இந்தநிலையில், நடிகர் கமல் இந்தத் தீர்ப்பு குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "காவிரிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பது மன நிம்மதி அளிக்கிறது.
கிடைக்கும் நீரை வைத்துக்கொண்டு பாசனத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை நாம் செய்ய வேண்டும். 2 மாநில விவசாயிகளும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக உள்ளது சற்றே ஆறுதல் அளிக்கிறது," என கருத்துத் தெரிவித்துள்ளார்.
BY MANJULA | FEB 16, 2018 1:39 PM #KAMAL #CAUVERYVERDICT #TAMILNADU #கமல் #காவிரிதீர்ப்பு #தமிழ்நாடு #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories