
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் இந்தியத் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், இன்று மாலை தனி விமானத்தில் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது இறுதி அஞ்சலியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி, லதா ரஜினிகாந்த், ஹன்சிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மும்பையில் ஏற்கனவே தங்கியுள்ளனர்..
இந்த நிலையில், ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் புறப்பட்டு செல்கிறார் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
BY MANJULA | FEB 26, 2018 2:19 PM #SRIDEVI #SRIDEVIDEATH #KAMALHAASAN #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #கமல்ஹாசன் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories