'கபாலி' படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பித் தரவில்லையெனில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விநியோகஸ்தர் செல்வக்குமார் என்பவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'கபாலி' குறித்த விநியோகஸ்தர் செல்வக்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
'கபாலி' படம் நஷ்டம் எனக் கூறுவது முற்றிலும் பொய். 'கபாலி' மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே ரூ.13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
ஜி.பி.செல்வக்குமாருக்கும், 'கபாலி' படத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. மேலும், செல்வக்குமார் கபாலி படத்தை வாங்கவில்லை. விநியோகஸ்தர் வேணுகோபால் என்பவருக்கு சாட்சிக் கையெழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார்.
அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர் தான் வாங்கினார். அவருக்கும், எனக்குமான பணப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும்- நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன.
சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், அவருக்கு நான் ரூ 61 லட்சம் பணம் கொடுத்து உதவியிருக்கிறேன்,".
BY MANJULA | MAR 5, 2018 5:56 PM #RAJINIKANTH #KABALI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS