திடீர் மாரடைப்பு காரணமாக நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு துபாயில் உயிரிழந்தார். இது அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் அவரது மூத்த மகள் ஜான்வியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்னவெனில், ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார்- ஜான்வி நடித்து வரும் படம் வெளியாக இன்னும் 1 மாதம் தான் உள்ளதாம்.
பட ரிலீசுக்கு முன்பே ஸ்ரீதேவி இறந்ததால், தனது நடிப்பைப் பார்க்காமலேயே அம்மா இறந்து விட்டாரே என ஜான்வி வருத்தத்தில் ஆழ்ந்துள்ளாராம்.
இதேபோல ஜான்வியின் அண்ணன் அர்ஜுன் கபூரின் (போனி கபூரின் முதல் மனைவி பையன்) அம்மாவும், அர்ஜுனின் முதல் படம் வெளியாக சரியாக 1 மாதம் இருக்கும்போது இறந்தது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 25, 2018 6:21 PM #SRIDEVI #SRIDEVIDEATH #JHANVIKAPOOR #ARJUNKAPOOR #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #அர்ஜுன்கபூர் #ஜான்விகபூர் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories