கோலியின் விக்கெட்டைக் 'கொண்டாடாதற்கு' காரணம் இதுதான்: ஜடேஜா
Home > News Shots > தமிழ்By Manjula | May 05, 2018 08:41 PM

புகைப்பட உதவி @IPL
ஐபிஎல் போட்டியின் 35-வது ஆட்டம் புனேவில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஜடேஜா வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றிய ஜடேஜா இதனைக் கொண்டாடாமல் இருந்தார்.
அந்த சமயத்தில் இருவர் கொடுத்த முக ரியாக்ஷன்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கோலியின் விக்கெட்டை ஏன் கொண்டாடவில்லை? என்பதற்கு ஜடேஜா தற்போது பதில் அளித்து இருக்கிறார்.
அதில், "இன்று என்னுடைய பந்துவீச்சு குறித்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ஏனென்றால் நான், சரியான இடத்தில் பந்து வீசினேன். விராட் கோலியை விக்கெட் எடுத்தது என்னுடைய முதல் பந்து. அதனால், நான் கொண்டாட்டத்துக்குத் தயாராகவில்லை. அப்போது நான், ஒரு முக்கியமான விக்கெட் எடுத்ததாக உணர்ந்தேன்,'' என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை எப்படிப் பயன்படுத்தலாம்?... தோனிக்கு ஆலோசனை வழங்கிய வீரர்!
- IPL: Mumbai Indians defeat Kings XI Punjab
- பஞ்சாப் 'பவுலர்களை' பதறவிட்ட கெயில்...மும்பைக்கு 'இலக்கு' இதுதான்!
- Another Chris Gayle show leads KXIP to a comfortable total
- 'சிங்கிள்' பவுண்டரி கூட அடிக்க விடாமல்.. 'தோனி'யை தொடர்ந்து அச்சுறுத்தும் பவுலர்!