இந்தியா முழுதும் சுற்றிப்பார்க்க பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா கட்டண விபரங்கள் இதோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 07, 2018 06:10 PM
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏராளமான அனைத்து இடங்களையும் காண பலருக்கு வாழ்நாளே ஆகலாம். பொருளாதாரம், நேரம், எளிமையான போக்குவரத்து முதலான விஷயங்கள் இதற்கு முக்கிய காரணிகள்.
இதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தரும் விதமாக `பாரத தரிசனம் சிறப்பு ரயில் சுற்றுலா’ என்கிற திட்டத்தின் கீழ் இந்தியன் ரயில்வே துறை கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார், அளித்த பேட்டியில், 2005-லிருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வரும் இந்தியன் ரயில்வே துறை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் 330-க்கும் மேற்பட்ட சுற்றுலாக்களை நிகழ்த்துள்ளதாகவும்,
இவ்வருடம் ‘பாரத தரிசன சுற்றுலா’ என்கிற பெயரில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளதாகவும், குறைந்தபட்ச கட்டணமாக 900 ரூபாயில் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது. இதன்படி இயக்கப்படும் ரயில்கள் போகும் வழித்தடங்களை அறிவித்துள்ளனர்.
14.11.2018-ல் ராமாயண யாத்திரா என்கிற பெயரில் மதுரையிலிருந்து புறப்பட்டு ஹம்பி (கர்நாடகா), நாசிக் (மகாராஷ்டிரா), சித்திரக்கூடம் (உ.பி), தர்பங்கா (பீகார்), சீதாமார்ஹி (பீகார்), அயோத்தியா (உ.பி), நந்திகிராமம் (மே.வ), அலகாபாத் (உ.பி), சிருங்க வெற்பூர் (உ.பி) உட்பட தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் ஆகிய பல இடங்களுக்கும் சென்று மதுரையிலேயே முடிவடையும் 15 நாட்கள் சுற்றுலாவின் மொத்த கட்டணம் ரூ.15,830.
டிசம்பர் மாதம் 2-ம் தேதி மதுரையிலிருந்து புறப்படும் 2 வது சிறப்பு ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், பெங்களூர், சென்னை சென்றால் வழியாக ஹைதராபாத், ஔரங்காபாத், அஜந்தா, எல்லோரா, மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களுக்குச் செல்லும் 10 நாள் பயண கட்டணம் ரூ.10,100.
மதுரையிலிருந்து 14.12.2018 -ல் புறப்படும் 3வது சிறப்பு கோவா ஸ்பெஷல் ரயிலானது திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், சென்னை சென்ட்ரல், சேலம், கோவை வழியாக 5 நாள்கள் சுற்றுவதற்கு கட்டணம் ரூ.4,725.
இதேபோல் 14.12.2018 -ல் மதுரையில் இருந்து புறப்படும் 4வது சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, சென்னை, சேலம், கோவை வழியாக மூகாம்பிகை மற்றும் கர்நாடகாவின் பல கோயில்கள் வழியாக 5 நாள்கள் சுற்றுவதற்கு கட்டணம் ரூ.6,930.