ஐபிஎல் 2018: வெற்றிபெறும் அணிக்கு 'பரிசுத்தொகை' எவ்வளவு தெரியுமா?
Home > News Shots > தமிழ்By Manjula | May 27, 2018 10:10 PM
புகைப்பட உதவி @IPL
ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணிக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில் கோப்பை வெல்லும் அணி மற்றும் 2-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கோப்பை வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாயும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 12.5 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு, ஆரஞ்சு தொப்பி+டிராபி உடன் ரூ 10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதிக விக்கெட்டுகள் குவித்த வீரருக்கு, பர்ப்பிள் தொப்பி+டிராபி உடன் ரூ 10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.