அடுத்தடுத்து 'வீழ்ந்த' விக்கெட்டுகள்... 'முதல்' வெற்றியைப் பெறுமா மும்பை?
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 17, 2018 08:11 PM
மும்பை மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், விராட் கோலியின் பெங்களூர் அணியும் நேரடியாக மோதி வருகின்றன.
இந்த ஐபிஎல்-லில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. அதே நேரம் பெங்களூர் அணி 1 வெற்றி, 2 தோல்விகளுடன் உள்ளது.
இந்தநிலையில், டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, வழக்கம் போல பவுலிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து மும்பை அணி முதலில் களமிறங்கியது.
பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அடுத்தடுத்த பந்துகளில் மும்பை அணியின் சூர்யக்குமார் யாதவ், இஷான் கிஷான் இருவரையும் வெளியேற்றினார்.
இதனால் மும்பை அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை அணி 4 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 39 ரன்களை எடுத்துள்ளது.
மும்பை அணி வீரர்கள் விவரம்: ஈ லீவிஸ், எஸ்.யாதவ், இஷான் கிஷான், ரோஹித் சர்மா(கேப்டன்), பொல்லார்ட், குருனால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, மெக்லெநெகன், மார்க்கண்டே, பும்ரா, ரஹ்மான்.
பெங்களூர் அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி(கேப்டன்), டி காக், ஏபி டிவிலியர்ஸ், எம்.சிங், ஆண்டர்சன், எஸ்.கான், வாஷிங்டன் சுந்தர், வோக்ஸ், எம்.சிராஜ், உமேஷ் யாதவ், யஷ்வேந்திர சாஹல்.