'ஊர்வசி ஊர்வசி' பாடலுக்கு நடனமாடி... வான்கடே மைதானத்தை அதிரவைத்த பிரபுதேவா!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 07, 2018 06:57 PM
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இதில் பிரபல பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், நடன புயல் பிரபு தேவா மற்றும் நடிகைகள் தமன்னா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.தொடக்க விழாவில் ஊர்வசி மற்றும் குலேபா உள்ளிட்ட தமிழ்ப்பாடல்களுக்கு பிரபுதேவா உற்சாகமாக நடனமாடினார்.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.
மே 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Kili-O-Patra reveals winner of CSK vs MI
- 'சென்னை மட்டுமில்ல' நாங்களும் 'வீடியோ' ரிலீஸ் பண்ணுவோம்: விராட் கோலி
- Rohit Sharma on mid-season transfers in IPL
- 'சென்னை சூப்பர் கிங்ஸ்'க்கு பெரிய விசில் அடிங்க.. அதிகாரப்பூர்வ வீடியோ உள்ளே!
- 'அழைத்தாலும் ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டேன்': பாகிஸ்தான் வீரர் ஆவேசம்!