ஒருவழியாக... 'முதல் வெற்றி'யைப் பதிவு செய்தது நடப்பு சாம்பியன் 'மும்பை இந்தியன்ஸ்'
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 18, 2018 12:02 AM
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 14-வது ஐபிஎல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், விராட் கோலியின் பெங்களூர் அணியும் நேரடியாக மோதியது.
டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, வழக்கம் போல பவுலிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து மும்பை அணி முதலில் களமிறங்கியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைக் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் 94 ரன்களும், லூயிஸ் 65 ரன்களும் குவித்தனர்.
இதைத்தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து, 167ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி, 46 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அதிகபட்சமாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, களத்தில் இறுதிவரை நின்று 92 ரன்களைக் குவித்தார்.
மும்பை அணியின் குருணால் பாண்ட்யா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய மும்பை அணிக்கு, நடப்பு ஐபிஎல்லில் இது முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.